பெண்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய 10 உணவுகள்..!

பெண்கள் ஆண்களை விட உடலளவிலும் மன அளவிலும் முற்றாக வேறுபட்டவர்கள். இவர்களிற்கு உட்டச்சத்து அதிகமுள்ள உணவுகளை தேர்வு செய்வதில் அதிக அக்கறை காட்ட வேண்டியது அவசியமானது.

இங்கு கிடைக்கும் மிகச் சிறந்த உணவுகளின் பட்டியலில் சேர்த்துக் கொள்கின்றனர். அதற்கு காரணம் அவற்றில் உள்ள அதிகளவான ஊட்டச்சத்துக்களே காரணம்.

பெண்கள் இவற்றை உட்கொள்ள வேண்டியதற்கான முக்கிய காரணம் இதில் காணப்படும் அண்டிஒக்ஸிடன், இவை உடலை பல தாக்கங்களில் இருந்து பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றது.

உடலில் ஃபிறீ ராடிக்கல் தாக்கத்தினால், மூளை நரம்புகளின் பாதிப்பு, கண்களின் பார்வைகளில் பிரச்சினை ஏற்படுதல், போன்ற பல பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.

அண்டிஒக்ஸிடன், விட்டமின், கனியுப்புக்கள் அதிகம் இருக்கும் இந்த உணவுகளை உட்கொள்வதனால் உடலின் ஆரோக்கியம் சிறப்பாக பேணப்படும்.

உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மிகச் சிறந்த உணவுகள்:

1. பீற்றூட் பானம்.
வேலை முடித்து வந்ததும் இனிப்பான பானங்களை அருந்துவதை விட பீற்றூட் பானம் அருந்துவது சிறந்தது. இது விளையாட்டு வீரர்களிற்கும் புத்துணர்ச்சியையும் சக்தியையும் பெற்றுத் தரும். இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

முக்கிய குறிப்பு:
பீற்றூட்டுடன் கரட், ஆப்பிள் போன்ற பழ வகைகள், விநாகிரி, ஒலிவ் எண்ணெய் சேர்த்து பானமாக தயாரித்து அருந்துவது சிறந்தது.

2. கோஜீ பெர்ரி.
கோஜியில் கரோட்டினைட் எனும் அண்டிஒக்ஸிடன் இருப்பதனால் உடலில் நச்சுக்களை வெளியேற்றுவதுடன், புற்றுநோய், இதய நோய்கள் வராமல் தடுக்கின்றது.

முக்கிய குறிப்பு:
காலையில் மென்பானங்களுடன் அல்லது ஓட்ஸ் உணவுடன் சேர்த்து இதனைச் சாப்பிடலாம்.

3. மத்தி மீன்.
மத்தி மீனில் அதிகளவான ஒமேகா-3 கொழுப்பமிலம் இருப்பதனால் இரத்த அழுத்தத்தையும் மன அழுத்தத்தையும் குணப்படுத்த உதவுகிறது. அத்துடன் கல்சியம், விட்டமின் டி என பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுவதுடன் இரத்த குளுக்கோஸ் அளவையும் குறைக்கின்றது. அத்துடன் புற்றுநோய்க்கு எதிராகச் செயற்படும்.

முக்கிய குறிப்பு:
எலுமிச்சை, ஒலிவ் எண்ணெய், மிளகு சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.

4. சுருள் பாசி:
சுருள் பாசியில் அதிகளவான புரோட்டின், கொழுப்பமிலம், விட்டமின்கள், கனியுப்புக்கள், அண்டிஒக்ஸிடன் போன்றவை காணப்படுவதனால் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதுடன் புற்றுநோய்க்கு எதிராகச் செயற்படும்.

முக்கிய குறிப்பு:
2 மேசைக்கரண்டி சுருள் பாசி, 2 வாழைப்பழம், 1 கப் மாம்பழம் அல்லது அன்னாசி போன்றவற்றை பிளண்டரில் போட்டு அரைத்து பானமாக அருந்தவும்.

5. இலவங்கப்பட்டை:
இலவங்கப்பட்டையினை இனிப்பு உணவுகளில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம் இதனை பயன்படுத்துவதன் மூலம் கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க முடியும். அத்துடன் வீக்கத்திற்கு எதிராகச் செயற்படும்.

முக்கிய குறிப்பு:
தயிர், மென்பானங்கள், ஓட்ஸ் உணவுடன் தினமும் காலை உணவுகளில் சேர்த்துக் கொள்வது சிறந்தது

6. அவுரிநெல்லிகள்:
அவுரி நெல்லியில் நோய்களிற்கு எதிராகச் செயற்படும் அண்டிஒக்ஸிடன் இருப்பதுடன் விட்டமின்கே, சி, போலேற், நார்ப் பொருட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுவதுடன். இது இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

முக்கிய குறிப்பு:
சாலட், மற்றும் வாட்டும் உணவுகளில் இதனைச் சேர்த்து சிற்றூண்டியாக சாப்பிடலாம்.

7. அவகோடா:
அவகோடா ஆரோக்கியம் நிறைந்த மற்றொரு உணவு. இதில் காணப்படும் மோனோசாற்சுரேட் கொழுப்பு, போலேற், விட்டமின் கே, சி பெண்களிற்கு மிகவும் அவசியமானது. வாழப்பழத்தை விட பொட்டாசியம் இதில் அதிகளவில் காணப்படும். வாரத்தில் 2 அல்லது 3 தடவைகள் இதனை சாப்பிடுவதனால் உடல் கொழுப்பைக் குறைத்து விடலாம்.

முக்கிய குறிப்பு:
அவகோடாவை வெட்டி வேக வைத்து சாப்பிடுவதோ அல்லது சாலட், மென்பானங்களில் சேர்த்து சாப்பிடுவதோ சிறந்தது.

8. புரோகோலி:
புரோக்கோலி பச்சை காய் வகைகளில் ஒன்று. இதில் விட்டமின் கே, ஏ, சி, மங்கனீஸ், போலேற், கல்சியம், அண்டிஒக்ஸிடன் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் காணப்படும். இதனை உட்கொள்வதனால் உடலில் ஏர்படும் வலி வீக்கங்களை குறைப்பதுடன், கண் நோய்கள், இதய நோய்களை குணப்படுத்தும். அத்துடன் புற்றுநோய்க் கலங்கள் வளராமல் தடுக்கின்றது.

முக்கிய குறிப்பு:
பாஸ்தா, சூப், சண்ட்விச் களில் புரோக்கோலியை பயன்படுத்தலாம்.

9. பாதாம்:
பாதாம் ஊட்டச்சத்து செறிந்துள்ள கடலை வகை. இதில் கல்சியம் மட்டுமல்லாது, கனியுப்புக்கள், புரோட்டின், ந்ந்ர்ப் பொருட்கள், நல்ல கொழுப்பு போன்றவையும் காணப்படுகின்றது. இதனை உட்கொள்வதனால் இரத்த அழுத்தம், குளுக்கோஸ், கொழுப்பு குறைவடைவதுடன், பசியைத் தூண்டாமல் உடல் எடையைக் குறைக்க உதவும்.

முக்கிய குறிப்பு:
சுவையான பாதாமை பச்சையாகவோ அல்லது வறுத்து சாப்பிடுவது சிறந்தது.

10. தேங்காய்:
தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெய்யில் உள்ள கொழுப்பமிலம் இலகுவாக சமிபாடு அடையக் கூடியது மட்டுமல்லாது, உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இதில் காணாப்படும் அண்டிஒக்ஸிடன் பக்டீரியாத் தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கின்றது.

முக்கிய குறிப்பு:
சுத்தப்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்துவதை தவிர்ப்பது சிறந்தது. சமைக்கும் மற்றும் வாட்டும் உணவுகளிற்கு தேங்காய் பயன்படுத்தலாம்.

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search