மாத்திரை போடாமல் மாதவிடாயின் போது வலியை குறைப்பது எப்படி..?

மாதவிடாயின் போது பெண்களின் மனநிலை மற்றும் உடல் நிலையில் பல மாற்றங்கள் ஏற்படும். அதற்கு காரணம் ஹார்மோன்களின் மட்டத்தில் ஏற்படும் மாற்றத்தினால் ஆகும். அத்துடன் அதிக வலியையும் ஏற்படுத்தும்.

மாதவிடாய் என்றால் என்ன?
பெண்களின் உடலில் இயற்கையாகவே ஏற்படும் மாற்றம். இதன் போது இனப்பெருக்க தொகுதியில் உள்ள கருப்பை மற்றும் சூலகங்கள் என்பவற்றில் ஹார்மோன்களினால் மாற்றங்கள் ஏற்படும்.

இதனால் கருத்தரிப்பதற்கு தயார் நிலை அடைந்து விடும். இந்த மாற்றங்கள் பெண்கள் பூப்பெய்திய பின்னர் ஒவ்வொரு மாதமும் நிகழும்.

இந்த கால கட்டத்திலேயே கரு முட்டைகளை ஏற்றுக் கொள்வதற்கு தயார் நிலையில் இருக்கும். அந் நேரங்களில் கரு முட்டைகள் கிடைக்காத போது மாதவிடாய் ஏற்படுகிறது.

இந் நிலையில் கருப்பையை சுற்றி புரோஸ்ரோகிளான்டின் இருப்பதனால், கருப்பை தசைகளில் பிடிப்பை ஏற்படுத்தி வலியை உருவாக்குகிறது.

மாதவிடாயின் போது ஏற்படும் வலிக்கு காரணம் கருப்பையின் தசைகளில் ஏற்படும் பிடிப்புகளே.

இந்த தசைகள் இரத்த நரம்புகளிற்கு எதிராக அழுத்தம் கொடுப்பதனால் போதியளவு இரத்தமும் ஒக்ஸிஜனும் கிடைப்பதில்லை. இதனாலேயே வலிகளும் பிடிப்புகளும் ஏற்படுகிறது.

பொதுவாக இந்த பிடிப்புக்கள் அதிகமாக முதுகுப் பகுதியிலும் அடி வயிற்றில் அதிகமாக வலியும் ஏற்படுகிறது. இந்த வலி உடல் முழுவதும் பரவி விடுகிறது.

அந்த நேரத்தில் வலி நிவாரணி மருந்துகளை உட்கொள்வார்கள். ஆனால் இவ்வாறு ஒவ்வொரு மாதமும் உட்கொள்ளுதல் சரியானதல்ல.

மாதவிடாயின் போது வலியை குறைப்பது எப்படி??

1. சூடான நீரினால் ஒத்தடம்
மாதவிடாயின் போது அடி வயிற்றுப் பகுதியில் சூடான நீரினால் ஒத்தடம் வழங்குவதனால் தசைப் பிடிப்புக்கள் நீங்கி வலியிருந்தி நிவாரணம் கிடைக்கும்.

2. மசாஜ்
அடி வயிற்றுப் பகுதி மற்றும் பின் புற புதுகுப் பகுதிகளில் மசாஜ் செய்து கொள்வதனால் தசைப் பகுதிகளிற்கு ஆறுதல் கிடைப்பதன் மூலம் வலியை விரட்ட முடியும். அந்தப் பகுதிகளில் தேங்காய் எண்ணெய் அல்லது ஒலிவ் எண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்தால் உடகிற்கு மட்டுமல்ல மனதிற்கும் ஆறுதல் கிடைக்கும்.

3. சில உணவுகளை தவிர்த்தல்
மாதவிடாயின் போது நீர்த் தேக்கத்தை அல்லது வயிற்றை ஊதச் செய்யும் உணவுகளான கார்பனேறட் பானங்கள், காஃபின், கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள், உப்பு அதிகம் உள்ள உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இவை இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவில் மாற்றத்தை ஏற்படுத்துவதனால் மேலும் வலி அதிகமாகும்.

4. உடற்பயிற்சி
உடற்பயிற்சிகள் செய்வதனால் உடலை உறுதியாகவும், தசைகளை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. ஆரோக்கியமான தசைகள் பிடிப்புக்களை ஏற்படுத்தும் போது வலிகளை ஏற்படுத்தாது. மாதவிடாயின் போது சிறியளவில் உடற்பயிற்சி, யோகா போன்றவை செய்வதனால் எண்டோர்பின் உருவாகிறது, இது மனதை சந்தோக்ஷமாக வைத்திருக்க உதவுகிறது.

5. மூலிகை
வீக்கத்தையும் வலிகளையும் குறைக்கும் மூலிகைகளான வெந்தயம், சீரகம், இஞ்சி, சாமோலின் போன்றவற்றை இந்தக் காலப்பகுதியில் பயன்படுத்துவதனால் வலிகளில் இருந்து நிவாரணாம் கிடைக்கின்றது.

6. டயட்
சாப்பிடும் போது எப்போதும் கைகளால் சாப்பிடுவதை பழக்கப்படுத்திக் கொள்ளுதல் அவசியம். நார்ச் சத்துக்கள், ஒமேகா-3 கொழுப்பமிலம், விட்டமின்கள் அதிகமுள்ள உணாவுகளானா பப்பாசி, பாதாம், வால்நட்ஸ், பூசனிக்காய் விதை, புரோக்கோலி, பிறவுன் அரிசி போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலா. இந் நேரங்களில் இலகுவில் சமிபாடு அடையக் கூடிய மரக்கறி உணாவுகளை தேர்ந்தெடுப்பது மிகவும் சிறப்பானது.

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search